தமிழ் வாழ்க

தமிழ் வாழ்க

இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 28 செப்டம்பர், 2015

புதிய கீதை


            ( வல்லமை இணைய இதழில் இக்கவிதை, வெளியான வாரத்தின் பாராட்டிற்குரிய கவிதையாகத் தேர்வு செய்யப்பட்டது)
                           

அதர்மம் அழித்து
தர்மம் காக்க வந்த
புதிய தலைமுறை
கண்ணனே

காஷ்மிர் த்ரௌபதியின்
துகிலுரிய காத்திருக்கும்
பாகிஸ்தான் துச்சாதனனுக்கு
பாடம் கற்பிக்கப்போவது
எப்போது

ஜனநாயக களத்தில்
களைகளாய் உணரப்படும்
சமுதாயச் சகுனிகளை
சட்டத்தின் முன்
எப்பொழுது நீ 
கொண்டு வருவாய்

ஊழல்களிலிருந்து 
நாட்டை மீட்டெடுக்க
புதிய கீதையை
எப்போது நீ
புனையப் போகிறாய் 

மாறு வேடப் போட்டிக்காக
கண்ணன் வேடமிட்டால்
இத்தனை மனுக்களா
அடப் போங்கப்பா
தலை சுத்துது

1 கருத்து: