தமிழ் வாழ்க

தமிழ் வாழ்க

இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 11 பிப்ரவரி, 2016

என்னவாக இருக்கும்



                    வல்லமை மின் இதழில் சிறந்த கவிதையாகத் தேர்வு செய்யப்பட்டது



பாரம்மா இங்கு வந்து
பாசத்துடன் யாரோ ஒருவர்
நம் படத்தை வரைந்து
வாசகங்கள் எழுதுமுன்
வந்த மழை காரணமாய்
ஓடிவிட்டார்போலும்!

பாசமென்றா நினைத்தாய்
பைத்தியக்காரி
ஆடுகள்தான் இங்கு
சிறுநீர் கழிக்கும் எனும்
எரிச்சல் எச்சரிக்கை
செய்ய நினைத்திருப்பார்கள்

அல்லது
படம் வரைந்து
பிச்சை எடுக்கும்
அந்தக் கிழவரின்
கைவண்ணமாய்
இருக்கக்கூடும்

நாளைய தேர்தலில்
நம் சின்னத்தில்
போட்டியிடும் வேட்பாளர்
சுவரில் முன்பதிவு பெற
தீட்டிய சித்திரமாய்
இருக்கலாம்

இல்லையெனில்
விரைவில் திறக்க இருக்கும்
கறிக்கடையின்
விளம்பரமாயும் இருக்கலாம்
இங்கிருப்பது நல்லதல்ல
வா வா
விரைந்து செல்லலாம்

3 கருத்துகள்:

  1. பாரம்மா இங்கு வந்து பாசத்துடன் யாரோ ஒருவர் நம் படத்தை வரைந்து வாசகங்கள் எழுதுமுன் வந்த மழை காரணமாய் ஓடிவிட்டார்போலும்!//
    இனிய வாழ்த்துகள்.
    தமிழ் மணத்தில் எனது ஆக்கம் இணைக்கும் போது தங்கள் பெயர் கண்டு வந்தேன்.
    (வேதாவின் வலை)
    https://kovaikkavi.wordpress.com/

    பதிலளிநீக்கு