தமிழ் வாழ்க

தமிழ் வாழ்க

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 9 ஜனவரி, 2015

அங்கு எழட்டும் என் தேசம்
(இந்தியா உலகிற்கு தந்த அற்புதமான கவிஞர்களுள் ரவீந்தரநாத் தாகூரும் ஒருவர். இந்திய தேசிய கீதம் அவரால் இயற்றப்பட்டதுதான் என்பதை அனைவரும் அறிவோம். அவரின் கீதாஞ்சலி காவியத்திற்கு நோபெல் பரிசு கிடைத்தது. கீதாஞ்சலியில் என்ணற்ற அற்புத கவிதைகள் இடம் பெற்றுள்ளது. அவற்றில் ஒன்றைத்தான் இங்கு தமிழாக்கித் தந்திருக்கிறேன்).எங்கு மனம் பயமின்றி தலை நிமிர்ந்து நடக்கிறதோ

எங்கு அறிவு சுதந்திரமாக இருக்கிறதோ

எங்கு உட்பூசல்களால் உலகம்
உடைந்து துகள்கள் ஆகாமல் இருக்கிறதோ

எங்கு தளர்வறியா உழைப்பின் கரங்கள்
நேர்த்தியை நோக்கி நீள்கிறதோ

எங்கு தெளிந்த பகுத்தறிவு நீரோடை
பாழாய்ப் போன பழக்கங்கள் என்னு பாலைவனத்திற்குள்
பாதை மாறாமல் பயணிக்கிறதோ

எங்கு உங்கள் மனதை
பரந்த நினைவு செயல்களை நோக்கி
எடுத்து செல்ல முடிகிறதோ

அங்கு, அந்த சுதந்திர சொர்க்கத்தில், ஓ தந்தையே
என் தேசம் எழட்டும்!கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக