தமிழ் வாழ்க

தமிழ் வாழ்க

இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 16 மார்ச், 2015

அமெரிக்காவை ஏன் வெறுக்கிறீர்கள்(ஜாக்கி காம்ப்டன்Jackie Compton)  அமெரிக்காவின் முன்னணி கவிஞர்களில் ஒருவர். அவர் இயற்றிய Why hate America என்ற கவிதையின் தமிழாக்கத்தை இங்கு தந்திருக்கிறேன்.வஞ்சப் புகழ்ச்சியில் இயற்றப் பட்டிருக்கிறது இக்கவிதை.) 

ஆயிரம் காரணங்கள் உண்டு
அமெரிக்காவை வெறுக்க
அத்தனையையும் அடுக்கிட
இயலாது எனக்கும்
நீங்கள் கூட வெறுக்கலாம்
தலை வணங்க அரச குடும்பங்கள்
இல்லாதஅமெரிக்காவை!

  
கடலிலிருந்து ஒளிரும் கடலுக்கு
சுதந்திரமாய் செல்வதற்கும்
செல்லும் பொழுதே
பொன்னென மின்னும்
தானிய அலைகளை காணமுடிகிறதே
அதற்காக அமெரிக்காவை
நீங்கள் வெறுக்கலாம்

நீங்கள் எதனை நம்பினாலும்
நீங்கள் எதன் மீது
நம்பிக்கை வைத்திருந்தாலும்
அவற்றிற்கான உரிமைகளை
இங்கு உருவாக்கித் தருவது
கடவுளன்றி  அரசுகள் அல்ல என்பதற்காக
அமெரிக்காவை நீங்கள் வெறுக்கலாம்

சுதந்திர சிந்தனை கதவுகளை
அமெரிக்கா மூடுவதில்லை என்பதற்காக
நீங்கள் அமெரிக்காவை வெறுக்கலாம்

வாயில் கதவை திறந்து வைத்தால் போதும்
வாய்ப்புகள் வந்து வரவேற்கிறதே
அதற்காக
அமெரிக்காவை நீங்கள் வெறுக்கலாம்

பட்டியலுக்கு முடிவில்லை என்பதால்
பாதியில் முடிக்கிறேன்


அமெரிக்கா
என் இதயத்தின் இனிமை நீ
உன்னால் மட்டுமே
உன்னை வெறுக்கும் உரிமைகூட
அவர்களுக்கு கிடைத்திருக்கிறது
அடக்குமுறை பயங்கள் எதுவுமின்றி!கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக